கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கும்.! தொல்லியல் துறை அமைச்சர் விளக்கம்.!
- சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உலகத் தமிழ்க்கவிதை மாநாட்டின் சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
- கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளதாக வெளியான தகவலுக்கு மாஃபா.பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்தார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உலகத் தமிழ் கவிதை மாநாட்டின் சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட முடிவுகள் மொழி பெயர்க்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து கட்ட அகழாய்வு முடிவுகளும் தொகுத்து வெளியிடப்படும் என தெரிவித்தார்.
மேலும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளதாக வெளியான தகவலுக்கு தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்து, இது பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு தொடங்கும் என்றும் அவர் கூறினார்.