கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு, 3 வாரங்களில் நிறைவடையும்-அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு, 3 வாரங்களில் நிறைவடையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து கூறுகையில்,கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு, 3 வாரங்களில் நிறைவடையும் .
முதல் 3 கட்ட அகழாய்வு அறிக்கைகள் முதலமைச்சரின் அனுமதிபெற்று விரைவில் வெளியிடப்படும்.கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசின் நிதியாக ரூ.15 கோடி கோரியுள்ளோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.