ஊரடங்கு உத்தரவால் கீழடி 6-ம் கட்ட அகழ்வாய்வு தற்காலிகமாக நிறுத்தம்

Default Image

ஊரடங்கு உத்தரவால் கீழடி 6-ம் கட்ட அகழ்வாய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன.பின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 6-வது கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது . அதன்படி 6-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வந்தது.

இதற்கு இடையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் கீழடி 6-ம் கட்ட அகழ்வாய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என தொல்லியல்துறைதகவல் தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update