தேர்வை தமிழ், ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் .. சீமான் வேண்டுகோள்..!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி, பொறியாளர் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்புத் தேர்வினை இணையவழி மூலம் நடத்த முடிவு செய்திருக்கும் தமிழக அரசு, அதனை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதன்மூலம், கிராமப்புற மாணவர்களும், தமிழ்வழியில் பயின்றவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். ஆகவே, அத்தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்த வழிகோல வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், கிராமப்புற மாணவர்களும், தமிழ்வழியில் பயின்றவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். ஆகவே, அத்தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்த வழிகோல வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
(2/2)
— சீமான் (@SeemanOfficial) September 22, 2020