அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! காரணம் என்ன?

டிச.14ம் தேதி நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

tnpsc

சென்னை :  அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிகளை தேர்வு செய்யும் தேர்வுகள் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து,  சில தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாற்றுகளினால் தேர்வகள் தேர்வு எழுதமுடியாமல் போன காரணத்தால் மறுதேர்வு தேதி நடைபெறும் என அதற்கான தேதி பற்றிய விவரத்தையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர். நிலை-II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை 13.09.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இத்தெரிவிற்கான கணினிவழித் தேர்வு 14.12.2024 அன்று பிற்பகல் 15 மாவட்ட மையங்களில் 4186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது.

சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது. தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாக பரிசீலனை செய்து, அதனை ஏற்று. மேற்கண்ட பதவிக்காக 14:122024 பிற்பகல் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் இரத்து செய்கிறது.

மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு. மறுதேர்வு 22022025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும். பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்” என அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested