உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு இரட்டிப்பு உதவி தொகை.! நிதியமைச்சர் அறிவிப்பு.!
நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கான கருணை தொகையினை 40 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
பட்ஜெட் 2023-24 :
இதில், மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம், காலை உணவு திட்டம் , சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம் என பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் நிதியமைச்சர் அறிவித்து வருகிறார் .
ராணுவ வீரர்களின் கருணை தொகை :
இதில், இந்திய நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பணியின் போது, உயிர் தியாகம் செய்த, தமிழ்நாட்டை சேர்ந்த படை வீரர்கள் குடும்பத்திற்கு வழக்கமாக வழங்கப்படும் கருணைத்தொகையானது 20 லட்சம் ரூபாய் ஆகும் .
இந்த கருணை தொகையை தற்போது 40 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.