செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு விசாரணை.! புலன் விசாரணை அவசியம்.! அமலாக்கத்துறை வாதம்.!
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் புலன் விசாரணை அவசியம் என அமலாக்கத்துறை சென்னை வாதிட்டு வருகிறது.
அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு, தற்போது காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரை அமலாக்கத்துறை சட்டவிரோமாக கைது செய்துள்ளது என செந்தில் பாலாஜி மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இரு நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வெளியான போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டார். மூன்றாவது நீதிபதி முன் விசாரணை தொடங்கி நடைபெற்ற போது இரு தரப்பும் தங்கள் விளக்கங்களை தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து ஜூலை 11,12க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில். நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வாதிடுகையில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் அமலாக்கத்துறை வசம் இல்லை. மேலும், அமலாக்கத்துறை விசாரணை நடத்த மட்டுமே அதிகாரம் உண்டு. தவிர புலன் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் இளங்கோ வாதிட்டார்.
இன்று மீண்டும் விசாரணை தொடங்கிய நிலையில், விருப்பம் போல நாங்கள் கைது நடவடிக்கையில் ஈடுபடவில்லை. எந்த அழுத்தத்திற்கும் அமலாக்கத்துறை உட்படுத்தப்பட்டு அதன் மூலம் செயல்படவில்லை. இஷ்டப்படி கைது நடவடிக்கையை நாங்கள் ஈடுபடவில்லை. சட்டவிரோத பண பரிவர்த்தனை பற்றி விசாரிக்கையில் புலன் விசாரணை அவசியமாகிறது. கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து புலன் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு. கைதுக்கு முன்னர் சேகரிக்கப்படும் ஆதாரங்கள் முகாந்திரம் மட்டுமே அதனை வைத்து முடிவு செய்ய முடியாது என அமலாக்கத்துறை உயர்நீதியாமன்றத்தில் வாதிட்டது.