#Breaking : அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கதுறையினர் அதிரடி சோதனை.!
அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள வீடு அலுவலகங்கள், விழுப்புரம் பகுதியில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனை எந்த வழக்கின் கீழ் அல்லது புகாரின் பெயரில் நடைபெறுகிறது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கு முன்னர் ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.