போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை.!
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.
சென்னையை சேர்ந்த முன்னாள் அரசியல் பிரமுகர், திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதை பொருள் கடத்தப்பட்டதாகவும், இவர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டன.
டெல்லியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன் போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் இதன் மூலம் வெளிநாடுகளுக்கு போதை பொருள் ஏற்றுமதி செய்யதும் இவர் மீது போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் பலவேறு வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு இடங்களில் சோதனை செய்து அதன் மூலம் ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, சட்டவிரோத பணம் பரிவர்த்தனை வழக்கில் ஜாபர் சாதிக் மனைவி அமீனாவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. இன்று பகல் 1 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அமினாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.