செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதிக்க வேண்டும்.! உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு.!
அமைச்சர் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவ குழு ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறை நிர்வாக கட்டுப்பாட்டில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். ஜூன் 28வரை அவருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பும், விசாரணைக்கு அனுமதி கேட்டு அமலாக்கத்துறையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை பிற்பகல் 3.30க்கு வரவுள்ளது.
இதற்கிடையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்தும், ஓமந்தூரார் அரசு மருத்துவ அறிக்கைகள் குறித்தும் எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ குழு பரிந்துரை செய்து இருந்தது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள செந்தில் பாலாஜி தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.