திமுக எம்பி ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்.! அமலாக்கத்துறை அறிவிப்பு.!
திமுக எம்பி ஆ.ராசாவின் பினாமி பெயரில் உள்ள 45 ஏக்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
திமுக எம்பி ஆ.ராசா 2004 – 2007 காலகட்டத்தில் சுற்றுசூழல் அமைச்சராக பொறுப்பில் இருந்த போது, சுற்றுசூழல் சான்று வழங்க லஞ்சம் பெற்று அதன் மூலம் வந்த பணத்தில் 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுளளது.
இதில் ஆ.ராசா தனது பினாமி பெயரில் வாங்கியதாகவும், இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் எனவும், இந்த சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.