செந்தில் பாலாஜி விவகாரத்தில் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை.! அமலாக்கத்துறை விளக்கம்.

Former Minister Senthil balaji

Senthil Balaji – கடந்த வருடம் ஜூன் மாதம் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாகத்துறையின் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையானது, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து, இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக பதியப்பட்டு உள்ளது. அதனால் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அமலாக்கத்துறையினரிடம் இருந்து இந்த குற்றசாட்டு குறித்து உரிய விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது.

Read More – ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

இந்நிலையில் இன்று சென்னை சிறப்பு முதன்மை அமர்வு நிதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வழக்கில் எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கைகளின் அடிப்படையிலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதியவில்லை என்றும் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரும் செந்தில் பாலாஜியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி, வழக்கை நாளை மறுதினம் மார்ச் மாதம் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். முன்னதாக செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவானது உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்த போது, அதனை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு ரத்து செய்து சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜி மீதான வழக்கை மூன்று மாதத்திற்கு முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More – தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு..! உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு போல, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரும், செந்தில் பாலாஜி மீது, அரசு வேலை வாங்கி தருவதாக பலபேரிடம் பணம் வசூல் செய்த வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் மீதான குற்றப்பத்திரிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

Read More – பிரதமர் விழாவில் முதல்வர் கலந்து கொள்ளமாட்டார்.! காரணம் இதுதான்.. திமுக விளக்கம்.!

அதில் 900 பேர் இந்த குற்றப்பத்திரிக்கை விசாரணைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையும் இன்று நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறையினர் சார்பில் கூறுகையில், குற்ற பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள 900 பேரில் சிலரை விசாரணைக்காக அனுமதிக்க தமிழக அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறினார். இதனை அடுத்த இந்த வழக்கு விசாரணையானது ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்