செந்தில் பாலாஜி விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு தாக்கல்!
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு தாக்கல்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு செந்தில் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் ஆர்என் இளங்கோ வாதாடி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றும், நாளையும் நடைபெறும் என 3வது நீதிபதி கார்த்திகேயன் கடந்த 7ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, இன்று விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.