செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்..!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்துள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த லிஃப்டில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் மூன்றாவது மாடியில் இருந்து வந்துள்ளனர்.
எதிர்பாராத வகையில் லிஃப்ட்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி உடைந்ததால் லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதனையடுத்து முதல் தளத்தில் வந்து நின்ற லிப்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த அனைவரையும் வெளியேற்றினார். இந்த நிகழ்வு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.