50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை .!
தர்மபுரியில் 50 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் யானை ஒன்று தவறி விழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஏலக்குண்டூர் அருகேயுள்ள பஞ்சப்பள்ளி காப்புக்காடு பகுதியில் அமைந்திருந்த விவசாய கிணற்றில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்துள்ளது . 7 வயது மதிக்கத்தக்க அந்த காட்டு யானை இரையை தேடி சென்ற போது தண்ணீர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளது .
அதனையடுத்து யானையின் சத்தத்தை கேட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தற்போது யானை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . அதே நேரத்தில் கிணற்றில் இருந்து யானையை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவ குழுவினருடனும் வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 யானைகள் வரை பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் இறப்பை குறைக்கும் விதத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.