தவெக கொடியில் யானை, வாகை மலர் இதுக்கு தான்! விளக்கிக் கூறிய விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள விளக்கத்தை ஒரு வீடியோவாக தயார் செய்து விளக்கினார் அக்கட்சித் தலைவர் விஜய்.

tvk title

விழுப்புரம் : ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ கட்சித் தொடங்கி அதன் கொடி அறிவிக்கப்பட்டது முதல், அதற்கான விளக்கத்தை மக்கள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என பலரும் இணையத்தில் அவர்களது கருத்தை தெரிவித்து வந்தனர்.

மேலும், அதற்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் விளக்கிக் கூறுவேன் என சமீபத்தில் நடைபெற்ற தவெக கல்விப் பரிசு வழங்கும் விழாவில் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தவெகவின் முதல் மாநாடானது நடைபெற்றது.

இதில், தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது, கொடிக்கான விளக்கத்தை மேடையில் உள்ள திரையில் வீடியோவாக ஒளிப்பரப்பினர்கள். அந்த வீடியோவில், கொடிக்கான விளக்கத்தைப் பற்றி விஜய் பேசி இருந்தார்.

நிறங்கள் :

சிவப்பு என்றால் புரட்சியின் நிறம், அதனால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது. அதனால் சிவப்பு நிறத்தை எங்கள் கட்சிக்காக தேர்வு செய்தோம்.
மஞ்சள் நிறமோ நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும், இலக்கை நோக்கி உற்சாகத்துடன் பாயும் எண்ணத்தை தூண்டும் நிறம். எனவே, இந்த இரண்டு நிறங்களும் எங்கள் கொடிக்கு பொருத்தமானவை எனக் கருதி தேர்வு செய்தோம்.

வாகை :

வாகை மலர் என்பது வெற்றியின் அடையாளமாகும், போரில் வெற்றி பெற்று, மன்னன் திரும்பும் போது ‘வாகை சூடி வந்தான்’ என்று சொல்வார்கள். அதனால் வெற்றியைப் பிரதிபலிக்க வாகை மலரை எங்கள் கட்சிக்கான அடையாளமாகக் வைத்துக் கொண்டோம்.

போர் யானை :

பலத்தைப் பற்றி பேசினாலே பலரும் ‘யானையின் பலம்’ என்று கூறுவார்கள். மேலும், அதன் தனித்தன்மையான உருவம், உயரம், மனோபலம் எல்லாம் அதனுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, போர் யானை என்பது ஒருவித தன்னிகரற்ற ஆற்றல் கொண்டது. போர்க்களத்தில் எளிதில் வெற்றியைப் பெற வல்லமை கொண்ட, தன்னம்பிக்கையோடு நிற்கும் இரட்டை போர் யானை உருவம் தான் எங்கள் கொடியில் இடம் பெற்றுள்ளது.

நட்சத்திரம் :

வாகை பூவைச் சுற்றிலும் 28 நட்சத்திரங்கள் உள்ளது. அது நாம் வென்றடுக்க உள்ள நமது செயல் திட்டங்களை சொல்வது 28 நட்சத்திரங்களும் இருக்கிறது. அது பச்சை மற்றும் நீல நிறத்தில் அமைத்துள்ளோம். அது நாம் கட்டமைக்கப் போகும் அமைதி பூங்காவை எடுத்துரைக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk maanadu live
TVK VIjay RS Bharathi
TVK Maanaadu
ThalapathyVijay tvk
tvk title
TVK Vijay Speech
tamilaga vettri kazhagam