மின் இணைப்பு வழங்க லஞ்சம்.? அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்.!
மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெரும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் புதிய பயனர்கள் மின்வாரியத்தின் மூலம் புதிய மின் இணைப்பு அல்லது புதுப்பிக்க கோரும் போது ஒரு சில அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இது குறித்து மின்வாரிய தலைமையகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளது.
இந்த புகாரை அடுத்து, தற்போது மின் வாரியாமானது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், புதிய இணைப்புகளுக்கு லஞ்சம் பெறுவதை தடுக்க பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். அப்படி யாரேனும் லஞ்சம் பெற்றால் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மின்வாரிய தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பயனர்கள் தகுந்த ஆதாரத்துடன் புகார் அளித்தால் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உரிய முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.