கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ. 94,985 என குறுஞ்செய்தி வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரேவண்ணா. இவர் கூலி தொழிலாளி செய்து வருகிறார். இவர் தனது மனைவி காளி மற்றும் குழந்தைகளுடன் சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார்.
தனது மனைவி காளியின் பெயரில் இவர் மின் இணைப்பு எடுத்திருந்த நிலையில், இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் வரை மட்டுமே இவர்கள் மின்சாரத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் அவர்கள் கட்டணம் செலுத்தவில்லை.
இந்த நிலையில், ரேவண்ணா செல்போனுக்கு மின்கட்டணம் ரூ.19,985 செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மின்வாரிய அலுவலகத்திற்கு இது தொடர்பாக தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில், பொறியாளர் குலசேகர பாண்டியன் விசாரணை செய்து புகார் குறித்து மின்னிணைப்பு மீட்டரை ஆய்வு மேற்கொண்டார். அதில் மின்வாரிய அதிகாரிகள் மின்சார மீட்டர் கணக்கெடுப்பில் கூடுதலாக பதிவாவதாகவும், தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…