தேர்தல் வந்தவே தி.மு.க.வுக்கு பயத்தில் ஜூரம் வந்துவிடும் -ஜெயக்குமார்.!

Default Image
  • காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் சுனாமியில்  இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
  • அப்போது மத்தியிலும் , மாநிலத்திலும் 13 வருடங்களாக காங்கிரஸ் கட்சி உடன் , தி.மு.க. கூட்டணியில் இருந்தது. ஆனால் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை.

கடந்த 2004 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 -ம் தேதி தமிழகம் கேரளா போன்ற மாநிலங்களில் சுனாமி பேரலை தாக்கியதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் 15-ம் ஆண்டு நினைவு தினம்  இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் சுனாமி நினைவு கல்வெட்டினையும் திறந்து வைத்து ,  படகில் கடலுக்குள் சென்று மலர் தூவினார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் ,மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு தேவையான நிதியை பெற்று மக்களுக்கு சேவை செய்து வருவது அ.தி.மு.க.தான்.

மற்ற மாநிலங்களை விட மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதில் தமிழகம் முன்னோடி  இருக்கிறது. மத்தியிலும் , மாநிலத்திலும் 13 வருடங்களாக காங்கிரஸ் கட்சி உடன் , தி.மு.க. கூட்டணியில் இருந்தது. ஆனால் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை.

தேர்தல் வந்தவே தி.மு.க.வுக்கு பயத்தில் ஜூரம் வந்துவிடும்.இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்று தருவதே எங்களுடையே நோக்கம் எனகூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்