நாடாளுமன்ற தேர்தல் எதிரிகளை விரட்டியடிக்க வேண்டிய தேர்தல் – முதலமைச்சர் பழனிசாமி
- அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
- நாடாளுமன்ற தேர்தல் எதிரிகளை விரட்டியடிக்க வேண்டிய தேர்தல் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், மத்தியில் போதுமான நிதியை பெற்று, தமிழகத்தின் எதிர்காலம் வளமாக அமைய அதிமுக வெற்றி பெற வேண்டும்.வரும் நாடாளுமன்ற தேர்தல் எதிரிகளை விரட்டியடிக்க வேண்டிய தேர்தல் .இன்னும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேர இருக்கின்றன என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.