Annamalai : பிரச்சாரத்தின் போது வாக்காளர் ஒருவருக்கு அண்ணாமலை பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ குறித்து தேர்தல் அலுவலர் விசாரணை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 3 வார காலமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மக்களை நேரடியாக சந்திக்கும்போது வாக்காளர்களிடம் பணம் கொடுப்பது போன்ற ஏதேனும் வீடியோ வெளியாகி விடுகிறது. பிறகு அதன் உண்மை தன்மையை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்ட கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஒரு பெண்மணி ஆரத்தி எடுத்தார். அப்போது அவரது கையில் அண்ணாமலை எதோ கொடுப்பது போலவோ, அல்லது ஆரத்தி தட்டை தாங்கி பிடிப்பது போலவோ ஒரு வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது.
இது குறித்து பதில் அளித்த கோவை மாவட்ட ஆட்சியர் (மாவட்ட தேர்தல் அலுவலர்), அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்த வீடியோ குறித்து அதன் உண்மை தன்மை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார். முன்னதாக, ராமநாதபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடன் புகைப்படம் எடுத்த ஒரு நபருக்கு பணம் கொடுத்ததாக ஒரு விடியோவும் பரவியது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…