சூடுபிடிக்கும் தேர்தல் களம்! அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை!

admk

நாடாளுமன்றம் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தயராகி வருகின்றனர். அந்தவகையில், மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதி என பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதான அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நடத்தி வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக என இருந்தாலும் பாஜகவும் தற்போது தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது. இதனால், தமிழகத்தில் மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே, திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், மாவட்ட வாரியான நிர்வாகிகளுடன் திமுக அமைச்சர்கள் ஆலோனை நடத்தி வருகின்றனர்.

ஆளுநரின் வன்மம்… மத நல்லிணக்க உறுதிமொழி.. தமிழக முதல்வரின் முக்கிய அறிக்கை.!

இதுபோன்று, பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வரும் திமுக, மக்களவை தேர்தலுக்கு ஆயுதமாகி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அதிமுக பங்கீட்டின் குழுவின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீட்டு குழுவை தொடர்ந்து அதிமுக பிரச்சார குழு மற்றும் விளம்பர குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபிமுனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  2019 நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவுடன் அமைத்த கூட்டணியை விட்டு விலகுவதாக ஏற்கனவே அதிமுக அறிவித்திருந்த நிலையில், புதிய கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என கூறியிருந்தது.

மேலும், கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்டவை பாஜக கூட்டணியில் தொடர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் தொடர்கிறதா? இல்லையா என்பது வெளிப்படையாக தெரியவில்லை. எனவே, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் யார் யாருடன் கூட்டணி என்பது குறித்து தெரியவரும் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்