பெரிய வியாழனுக்காக தேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது: ஐகோர்ட்அதிரடி தீர்ப்பு
கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் ஏப்ரல் 18-ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதால் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தேதியை மாற்றி வைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஆனால் அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் புனித விழாவான பெரிய வியாழன் கடைபிடிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் தேதியை மாற்றி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏனெனில் கிறிஸ்தவ பள்ளிகளிலும் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதனால் தேவாலயங்களில் அந்த நாள் வழிபாடு நடத்துவது கடினமாக இருக்கும் என வழக்கு தொடரப்பட்டது.
மேலும் தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் ஏற்கனவே இதே போன்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த வழக்கையும் தள்ளுபடி செய்கிறோம் என வழக்கினை தள்ளுபடி செய்தனர்.