சித்திரை திருவிழா நடைபெறும் பகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் -மதுரை ஆட்சியர்
- தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் பகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்துளளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.அதன் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மதுரை ஆட்சியர் நடராஜன் தேர்தல் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.அதில், மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் பகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். வாக்குப்பதிவை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .சித்திரை திருவிழா நடைபெறும் இடங்களில் உள்ள 33 வாக்குச் சாவடி மையங்களில் 121 வாக்குச் சாவடிகள் உள்ளன என்று மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்துளளார்.