திருமாவளவன் கேட்ட சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்
- தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க.வின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது.
மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் மக்களவை தேர்தலில் தி.மு.க கட்சி உடன் வி.சி.க கூட்டணி வைத்தனர்.
வி.சி.க கட்சிக்கு தி.மு.க விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகளை ஒதுக்கியது. அதில் ஒரு தொகுதியான சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனித்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் தனக்கு மோதிரம் , வைரம் ஆகிய சின்னங்கள் வேண்டும் என தேர்தல் ஆணைக்கு பரிந்துரை செய்தார் திருமாவளவன்.
ஆனால் தேர்தல் ஆணையம் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க.வின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது.