வேலூரில் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.
அதேபோல் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.அதுபோல் காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி மேற்கொண்டனர்.
மேலும் தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர் .பின்னர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.அதேபோல் சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தகவல் தெரிவித்தது.
இதன் பின் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை.வருமான வரித்துறையினரின் அறிக்கையை ஆய்வு செய்தபின் தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேலூரில் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.மேலும் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில்,மாஜிஸ்திரேட் அனுமதி அளித்ததும் வழக்கு பதிவாகும்.எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் .அறிக்கை அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தல் குறித்து ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…