ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் வழக்கு ஒன்றை நேற்று தொடுத்து இருந்தார். அதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் எண்ணிகையில் குளறுபடி இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
கள்ளஓட்டு அபாயம் : அதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் , இறந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பலரது வாக்காளர்கள் பெயர்கள் இரண்டு முறை உள்ளது என்றும், இதனால் கள்ள ஓட்டு போடும் அபாயம் இருக்கிறது. இதனை தடுத்து நியாயமான முறையில் தேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்கில் கோரிக்க வைக்கப்பட்டு இருந்தது.
தேர்தல் ஆணையம் உறுதி : இது குறித்து வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்து உள்ளது.
தேர்தல் ஆணைய உத்தரவு : இதற்கு முன்னதாக அதிமுக கொடுத்த புகாரின் பெயரில். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்திய பிரதாப் சாகு, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு வாக்காளர் பட்டியல் குறித்து முறையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…