#BigBreaking:இனி இவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை..!

Default Image

கொரோனா தொற்று குறைவாகவுள்ள 27 மாவட்டங்களில் இ-பதிவு முறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தளர்வுகளின் படி,27 மாவட்டங்களில் முன்னதாக இ-பதிவு முறையுடன் செயல்பட்டு வந்த கீழ்க்காணும் பணிகளுக்கு,தற்போது இ-பதிவு முறை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housckeeping) இ-பதிவில்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ-பதிவு இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.
  • கொரோனா தொற்று குறைவாகவுள்ள 27  மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ -பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.

 27  மாவட்டங்கள்:

சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி. கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை ,இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி ,தென்காசி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி,  திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் தூத்துக்குடி ,விருதுநகர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்