ராமநாதபுரத்தில் உள்ள பஜார் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் மற்றும் சக காவலர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அங்கு அதிக அளவில் விறகு ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனத்தை காவலர்கள் கை காட்டி நிறுத்த கூறினார்.
ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதனால் டாட்டா ஏசி வாகனத்தை விரட்டி பிடித்த காவல் ஆய்வாளர் விஜயகாந்த் டாட்டா ஏசி வாகனத்தின் ஓட்டுனர் கண்ணனை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்டனர். அப்போது காவல் ஆய்வாளர் விஜயகாந்த் கழுத்தில் ஓட்டுநர் கண்ணன் பலமாக கடித்துள்ளார்.இந்த சம்பவத்தில் காயமடைந்த காவல் ஆய்வாளர் விஜயகாந்த் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.
மேலும் ஓட்டுநர் கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…
வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ்,…