பயணிகள் சாப்பிடும் அறையில் தான், ஓட்டுநர், நடத்துனர்களுக்கும் உணவு தரவேண்டும்; போக்குவரத்துக் கழகம்.!
ஓட்டுநர், நடத்துனருக்கு உணவகங்களில் தனியறையில் உணவு வழங்கக்கூடாது என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் செயல்படும் உணவகங்களில் நிறுத்தப்படும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கும் இனி பயணிகளுக்கு உணவு வழங்கும் அறையிலேயே உணவு வழங்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலை உணவகங்களில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தனியாக உணவு வழங்கக்கூடாது என்று அனைத்து நெடுஞ்சாலை அமைந்த ஓட்டல்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சில உணவகங்களில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சிறப்பு கவனிப்பு செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக்கழகம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.