அரசு நிர்ணயித்த ஈரப்பத அளவுக்கு கொண்டு வர நெற்பயிரை சாலைகளில் கொட்டி காயவைத்துள்ளார் திருவாரூர் பகுதி விவசாயிகள். ஆனால், திடீரென்று பெய்த மழையால் மேலும் ஈரப்பதம் கூடி விட்டது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தற்போது அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
அறுவடை செய்த நேரத்தில் மழை பெய்து வரும் காரணத்தால் அரசு நிர்ணயித்துள்ள 17 சதவீத அதிகபட்ச ஈரப்பத அளவுக்கு காய வைக்க முடியாமல், ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் .
ஈரப்பத சதவீதத்தை அதிகரிக்க கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில், திருவாரூர் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பத அளவுக்கு கொண்டு வர சுமார் 5000 மூட்டைகள் அளவுக்கு நெற்பயிரை சாலையில் காய வைத்துள்ளனர்.
அப்போது பெய்த மழையால் மேலும் ஈரப்பதம் கூடிவிட்டது. இதனால் மீண்டும் ஈரப்பதம் கூடிவிட்டதே என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…