நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு…!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றதையடுத்து,தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அதன்படி,அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய தேர்தல் ஆணையர், தற்போது மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. மேலும்,வாக்குச்சாவடிகளை இறுதி செய்தல்,வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.