அமமுக அலுவலகத்தில் விடியவிடிய நடந்திய வருமான வரிச்சோதனை! ரூ.1.50 கோடி சிக்கியது
அமமுக ஒன்றிய அலுவலகத்தில் விடியவிடிய நடைபெற்ற சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது.
ஆண்டிபட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் விடியவிடிய சோதனை நடைபெற்றது. இன்று காலை 5 மணி அளவில் முடிந்து. நடந்திய வருமான வரிச்சோதனையில் 94 சிறு பாக்கெட்டு களில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒவ்வொரு பாக்கெட்டிலும் வாக்காளரின் பெயர் மற்றும் 300 ரூபாய் பணம் என எழுதப்பட்டிருந்தது.
சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது.அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தற்காக அமமுக மாவட்ட துணை செயலாளர் பழனி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் ஆண்டிப்பட்டியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை முயற்சி, பணத்தை திருடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஆண்டிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .