ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி எம்பி பதில்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் ஆணையம் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பேசிய திமுக எம்பி கனிமொழி, இரட்டை இலை தற்போது தாமரை இலையாக மாறிவிட்டது. தாமரை இலை அதானி என்ற கோடீஸ்வரரை தாங்கி பிடிக்கும் நிலையை பெற்றுள்ளது என விமர்சித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான் முதுகெலும்பை நிமிர்த்தி பேசுகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலளித்தார். முதுகில் ஏறி சவாரி செய்து தமிழ்நாட்டை பிடித்துவிடலாம் என்று என்னும் பாஜகவுக்கு பாடம் புகுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திமுக திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார் கனிமொழி.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…