தட்டாமலேயே தமிழக அரசின் கதவுகள் திறக்கும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை!

Default Image

தமிழ்நாடு முதலீட்டார்களின் முதல் முகவரியாக மாறவேண்டும் என்று ரூ.28,508 கோடி மதிப்பில், மொத்தம் 49 திட்டங்கள் தொடங்கி வைத்த பின் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை.

சென்னை கிண்டியில் நட்சத்திர விடுதியில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ரூ.28,508 கோடி மதிப்பில், மொத்தம் 49 திட்டங்கள் தொடங்கி வைத்தபின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது. அப்படிப்பட்ட தமிழ்நாடு முதலீட்டார்களின் முதல் முகவரியாக மாறவேண்டும். தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனவை வென்றுள்ளோம்.

அடுத்து எது வந்தாலும், அதனை எதிர்கொள்ளும் வல்லமை படைத்த மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளோம். கடந்த இரண்டு மாதத்தில் ரூ.489.78 கோடி முதலமைச்சர் பொது நிவாரண நிதி திரண்டுள்ளது. முதலீட்டார்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு நிச்சயம் மாறும்.

சவால்களை எதிர்கொள்கின்ற எங்கள் அரசுடைய திறமை என்றைக்கும் நிலைத்து, நீடித்து இருக்கும் என உறுதி அளித்துள்ளார். உலகளவில் உற்பத்தி துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது.

தெற்கு ஆசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவது தான் அரசின் லட்சியம். 2030 ஆண்டிற்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக (ஜிடிபி) தமிழநாட்டை உருவாக்குவது தான் அரசின் குறிக்கோள்.

தொழில் புரிவதை எளிமையாக்கவும், அதற்கு உகந்த சூழலை உருவாக்கவும் நான் உறுதி அளித்துள்ளேன். முதலீட்டாளர்கள் தொழில் துவங்க தேவதையான அனைத்து அனுமதிகளும், உடனுக்கு உடன் பெற்று தங்களுடைய திட்டத்தை விரைவாகவும், எளிதாகவும் நிறுவுவதற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளராம் (single window system) என்ற இணையதளம் 2.0 தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் புது முதலீட்டார்களுக்கு உதவும் வகையில் 24 துறைகளுடன், 100 சேவைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஒன்றை சாளரம் 2.0 இணையத்தளமாக இருக்கும். இணைய முறையில் விண்ணப்பங்கள் பரிலிக்கப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அதில், கூடுதலாக 210 சேவைகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் சேர்ப்பதற்கு திட்டமிட்டு உள்ளோம். தொழிலை வர்த்தகமாக கருதாமல் சேவையாக எண்ணி தொழில் முதலீட்டாளர்கள் செயல்படுகின்றனர். புலப்பெயர்த்த தமிழ் உறவுகளோடு தொழில் உறவை மேற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் தொழில் துவங்க திட்டமிட்ட உடனே, உங்கள் சிந்தனை செயல்பாட்டுக்கு வரும். அப்படிப்பட்ட சூழலை உருவாக்கி வைத்துளோம். தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்லுவார்கள், தட்டாமலேயே தமிழக அரசின் கதவுகள் திறக்கும் என்ற உறுதியை அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஓசூரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மின்சக்தி வாகனங்கள், சூரிய மின்கலம் உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். திண்டிவனத்தில் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க தொழில் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது.

கோவை, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடப்படும் என தனது உரையில் முதல்வர் கூறியுள்ளார்.

இதனிடையே, இவ்விழாவில், ரூ.17,141 கோடி மதிப்பீட்டில் 55054 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட 35 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரூ.7,111 கோடி மதிப்பில், 6,798 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க 5 வணிக உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

புதிதாக ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் 21,630 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மொத்தம் 49 திட்டங்கள் மூலம்  83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்