நாளை முதல் நடைபெறுகிறது திமுக உட்கட்சித் தேர்தல்

திமுகவில் உட்கட்சி தேர்தல் நாளை தொடங்குகிறது .முதற்கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூர், ஒன்றிய, கழகத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், திமுக உட்கட்சி 15-வது பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறுகிறது .1949-ம் ஆண்டு தொடங்கி உள்கட்சி அமைப்பு முதல் தலைமை கழகம் வரை ஜனநாயக அடிப்படையில் முறையாக ,இதுவரை 14 பொதுத்தேர்தல்கள் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க சிறப்புக்குரிய இயக்கம் திமுக ஆகும்.கழக சட்டத்திட்டங்களின் படி ,பல கட்டங்களாக கழக அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடைபெறும் . கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .
அதனை தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூர், ஒன்றிய, கழகத்திற்கும் தேர்தல் நடைபெறும்.இதற்கு பின்னர் புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர் ,பொதுச்செயலாளர் ,பொருளாளர் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025