திமுக என்னும் மிகப்பெரிய கட்சி உருவாக காரணமாக இருந்தவர் அறிஞர் அண்ணா….!!!
அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் செப்டம்பர் 15, 1909 ம் ஆண்டு பிறந்தார். இப்பொழுது இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எனப்படும் மிகப்பெரிய கட்சி உருவாக காரணமாக இருந்தவரே அறிஞர் அண்ணா தான்.
காலனி ஆதிக்கம் :
இந்திய தேசிய காங்கிரசு இந்திய சுதந்திர போராட்டத்தின் போது காலனி ஆதிக்கத்தை மிகவும் வன்மையாக கண்டித்தது. ஆனால் இந்த கட்சி பெரும்பாலும் பிராமிணர்கள், வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக இருக்கிறது என்று பெரியாரால் விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து பெரியார் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 1947ஐ கறுப்புதினமாக அறிவிக்க தனது தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்தார் .
இந்தியாவின் சுதந்திரம் :
இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அண்ணா “இந்தியாவின் சுதந்திரம்” இந்தியாவில் உள்ள அனைவரின் போராட்டத்தினாலும், வியர்வையாலும் கிடைக்கப்பெற்ற ஒன்று அது ஆரிய மற்றும் வடஇந்தியர்களால் மட்டும் பெறப்பட்டது அல்ல என்றார், இதனால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 1948ல் நடந்த “திராவிட கட்சியின் கட்சி” கூட்டத்திலிருந்து அண்ணா வெளியேறவும் நேர்ந்தது.
திமுக உருவாக்கம் :
அது மட்டுமல்லாமல் பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததால் அண்ணாவும் அவருடைய ஆதரவாளர்களும் திராவிட கட்சியை விட்டு வெளியேறி 1949ல் “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை பெரியாரின் மருமகன் இ.வி.கே சம்பத்துடன் இணைந்து உருவாக்கினார். இக்கட்சி குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது.