ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கு திமுக ஆட்சியே சாட்சி – ஈபிஎஸ்
அதிமுகவை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும். அது முதலமைச்சருக்கு கிடையாது என ஈபிஎஸ் பேச்சு.
கோவையில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஈபிஎஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு அதிமுகவின் திட்டங்களை துவக்கி வைத்துவிட்டு, அதை தங்கள் திட்டம் போல் காட்ட முயற்சிக்கின்றனர். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடுகிறது திமுக அரசு.
ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது ஒரு முதலமைச்சர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பது இந்த 18 மாத ஆட்சியில் காட்டியுள்ளனர். அதிமுகவை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும். அது முதலமைச்சருக்கு கிடையாது.
திமுகவின் 18 மாத கால ஆட்சியில் மக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். இனியாவது திமுக அரசு கும்பகரான தூக்கத்தில் இருந்து விழித்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.