தேமுதிகவை பழிவாங்க திமுகவினர் சூழ்ச்சி!!திமுக என்றாலே “தில்லுமுல்லு கட்சி” !!பிரேமலதா கடும் தாக்கு

Published by
Venu
  • அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .
  • திமுக என்றாலே “தில்லுமுல்லு கட்சி” என்று அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .

அதேபோல் விஜயகாந்த் தலைமையில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வந்தது.ஆனால் அதில் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

அதேபோல்  பிரதமர் நரேந்திர மோடி  கடந்த மார்ச் 06-ஆம் தேதி  சென்னையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த விழாவின் மேடையில் அதிமுக  கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் அன்றும் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று…ஆனால் அதில் இறுதி முடிவு எடுக்காமல் உள்ளது.

Image result for admk dmdk

 

அதேவேளையில்  பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழா மேடையில் விஜயகாந்தின் படம் வைக்கப்பட்ட பேனர் வைக்கப்பட்டது.பின்னர் அது நீக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம்  தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தனர். முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்டோர் துரைமுருகன் வீட்டுக்கு சென்று சந்தித்தனர்.

இதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,எங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க நிர்வாகிகள் வந்தனர்.எங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்று தெரிவித்தேன்.அதிமுக உடனான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு உள்ளது.

தேமுதிக கூட்டணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முடிவு செய்வார். தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலனை செய்யப்படும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

 

இந்நிலையில் இன்று கூட்டணி தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.அதில் மக்களவை தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை,குழப்பமுமில்லை.அரசியல் ரீதியாக தேமுதிகவை திமுக பழிவாங்குகிறது.திமுக, அதிமுக என இரு தரப்பினரிடமும் தேமுதிக பேசியதாக எழுப்பப்படும் கேள்வியே தவறானது.கலைஞர் உடல்நலம் இல்லாத போது சந்திக்க விஜயகாந்த் அனுமதி கேட்டார். ஆனால் ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை. .தேமுதிகவை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது.துரைமுருகன் பேசியது வெட்கக்கேடானது. உட்கார்ந்த இடத்திலிருந்து அவர் தூங்குவார் என்று கேள்விப்பட்டிருக்கேன். அதற்காக இப்படியா உளற வேண்டியது. திமுக என்றாலே “தில்லுமுல்லு கட்சி” என்று அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.

எதிரியாக இருந்தாலும் வரவேற்பதுதான் தமிழர் பண்பாடு .துரைமுருகன் நடந்து கொண்டது சரியில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார்.

அதேபோல் இந்த சந்திப்பில்  பத்திரிக்கையாளர்கள் மற்றும் தலைவர்களை ஒருமையில் பேசினார்  பிரேமலதா. நீ,வா , போ என செய்தியாளர்களை பேசினார் பிரேமலதா .பின்னர் செய்தியார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Recent Posts

ஜீன்ஸ் அணிந்ததால் சர்ச்சை: செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து மேக்னஸ் கார்ல்சன் விலகல்!

நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…

33 minutes ago

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…

1 hour ago

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

2 hours ago

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…

3 hours ago

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

13 hours ago