திருச்செந்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
எனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் சோதனை நடத்தினார்கள். பின்னர் துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.அதுபோல் காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி மேற்கொண்டு வந்தனர்.
அதேபோல் வேலூரில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் சிமெண்ட் குடோனில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது .மேலும் மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெறுவதாக வருமானவரித் துறை தகவல் வெளியிட்டது.
திமுகவின் திருச்செந்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் அனிதா ராதாகிருஷ்ணன்.தூத்துக்குடி மாவட்டம் தண்டுப்பத்தில் அவருக்கு பண்ணை வீடு உள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுகின்றார்.தூத்துக்குடியில் கனிமொழிக்கு உறுதுணையாக இருந்து தேர்தல் வேலைகளை செய்து வருகின்றார்.இந்நிலையில் நேற்று அவரது பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
தேர்தல் நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணையில் சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…