திமுகவினர் ரூ.2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்குகிறார்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் மட்டும் 7-ஆம் கட்ட மக்களவை தேர்தலுடன் 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும் 13 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தருமபுரியில் 8 வாக்குச் சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச் சாவடிகளிலும், திருவள்ளூர், ஈரோடு, கடலூரில் ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதனிடையே போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,அரவக்குறிச்சி வேலாயுதம் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது. வாக்களிக்க விடாமல் பெரும்பாலான மக்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளார்கள்.
போலீசில் புகார் கொடுத்தும் போதிய நடவடிக்கை இல்லை.தோல்வி பயத்தால், மக்களை திசை திரும்பும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.