அதிமுகவுக்கு துரோகம் செய்யும் ஓபிஎஸ்-க்கு பின்னால் இருந்து திமுக செயல்படுகிறது – சி.வி.சண்முகம்
அதிமுகவுக்கு துரோகம் செய்யும் ஓபிஎஸ்-க்கு பின்னால் இருந்து திமுக செயல் பட்டு வருகிறது சி.வி.சண்முகம் பேட்டி.
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சி.வி.சண்முகம் அவர்கள், வருகின்ற 11ஆம் தேதி திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், அதிமுகவுக்கு துரோகம் செய்யும் ஓபிஎஸ்-க்கு பின்னால் இருந்து திமுக செயல் பட்டு வருகிறது. அவ்வாறு செயல்பட்டாலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடுக்க முடியாது என்று அவர் பேட்டி அளித்துள்ளார்.