கூட்டணிக்கு பாமக வரவில்லை என திமுகவிற்கு ஆதங்கம்-ராமதாஸ்
- தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க-தே.மு.தி.க- த.மா.கா-புதிய தமிழகம்- புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளது.மேலும் அனைத்து கட்சிகளுக்கும் அதிமுக தொகுதிகளையும் பிரித்து கொடுத்துவிட்டது.அதனால் கட்சி வேட்பாளார்களையும் ஏறக்குறைய கட்சிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.கூட்டணிக்கு பாமக வரவில்லை என திமுகவிற்கு ஆதங்கம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.