தேர்தல் அறிக்கையில் சொன்னதை திமுக அப்படியே செய்துள்ளது – அமைச்சர் பெரியசாமி
குறைவான எண்ணிக்கையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக எதிர்கட்சிகள் கூறுவது உண்மைக்கு மாறானது என அமைச்சர் பெரியசாமி அவர்கள் பேட்டி.
அமைச்சர் பெரியசாமி அவர்கள் நகைக்கடன் தள்ளுபடி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நகைக்கடன் பெற்றவர்களில் 50% பேர் இந்த தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர்; முழு விவரங்களை சரிபார்த்த பின்னரே 40 கிராமுக்கு கீழ் கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். நகையை அடகு வைக்காமல் பணம் பெற்ற மோசடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் ஆதார் அட்டையை வைத்து முறைகேடாக ரூ.2 லட்சம் நகைக்கடன் பெறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் நகை கடன் தள்ளுபடி குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும அவர் கூறுகையில், குறைவான எண்ணிக்கையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக எதிர்கட்சிகள் கூறுவது உண்மைக்கு மாறானது. தேர்தல் அறிக்கையில் சொன்னதை அப்படியே திமுக செய்துள்ளது. உண்மைக்கு மாறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.