டெங்கு பரவலை தடுக்க தவறிய திமுக அரசு – இபிஎஸ் குற்றசாட்டு.!

Edappadi K Palaniswami

டெங்கு போன்ற விஷ காய்ச்சலை தொடர்ந்து பரவாமல் தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கேரளாவில் தற்போது நிபா வைரஸ் சற்று அதிகரித்து வருவது போல, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே பரவி வருவதாக தகவல் வெளியானது.

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழையால், அங்காங்கே நீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது.  இத்தகைய கொசுக்கள் டெங்கு போன்ற காய்ச்சலை பரப்பி பல உயிரிழப்பிற்கு காரணமாகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே பரவி வருகிறது. இதனால் ஏற்படும் தீவிர காய்ச்சல் காரணமாக ஒரு சில மரணங்களும் தமிழகத்தில் நிகழ்ந்துவிட்டன.

டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. தமிழக சுகாதாரத்துறை சரபில் டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுலமில்லாமல் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் அக்.1-ஆம் தேதி 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், டெங்கு போன்ற விஷ காய்ச்சலை தொடர்ந்து பரவாமல் தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சரின் மெத்தனம், அலட்சியம் போக்கால் டெங்குவுக்கு உயிரிழப்புகள் நடக்கின்றன. டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு தவறியுள்ளது என குற்றசாட்டியுள்ளார். எனவே மக்களின் உயிரை காக்க சிறப்பு மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் தனிப்பிரிவு அமைத்து பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்