பரபரப்பு…திமுக அரசின் ஊழல் ஆதாரங்கள் வெளியீடு?- அண்ணாமலை அறிவிப்பு!
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்ததில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.அந்த வகையில்,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெட்ரோல்,டீசல் விலையை திமுக அரசு குறைக்க வேண்டும் என நேற்று முன்தினம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இந்நிலையில்,திமுக அரசின் இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை நாளை அல்லது ஜூன் 4-ஆம் தேதி வெளியிட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:”இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் ஜூன் 3 அல்லது 4-ஆம் தேதி வெளியிட உள்ளோம்.ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருந்திக் கொள்ள வேண்டும்.இதனால்,திமுக ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் கிடையாது,திமுக அரசின் ஊழலால் பாதிக்கப்படுபவர்களிடமிருந்து தினமும் பல புகார் கடிதங்கள் எங்களுக்கு வருகின்றன.எனவே,இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.”என்று கூறியுள்ளார்.
மேலும்,”தமிழகத்தில் பாஜக தான் பிரதான எதிர்க்கட்சி என சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் செய்யப்படுவதாக அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. அனைத்து தலைவர்களுக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது.நம்பர் ஒன் கட்சி என்பது தான் அனைவரின் இலக்கு எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.இதனால் தமிழகத்தில் பாஜகவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவர கடுமையாக உழைத்து வருவதாகவும்,இதற்காக பாடுபடுவோம்”, எனவும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், “சசிகலா பாஜகவிற்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்ற நயினார் நாகேந்திரன் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து,கட்சியின் கருத்து அல்ல” என்றும் குறிப்பிட்டார்.
திமுக அரசின் இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை நாளை அல்லது நாளை மறுதினம் வெளியிட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.