நிவாரண பணியில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களை திமுக பாராட்ட தவறவில்லை …! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
நிவாரண பணியில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களை திமுக பாராட்ட தவறவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், கஜா புயல் நிவாரண பணிகளில் திமுகவினர் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு விரைந்து செயல்பட வேண்டும்.நிவாரண பணியில் உள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்களை திமுக பாராட்ட தவறவில்லை, அதே சமயத்தில் மக்களின் குறைகளை எதிரொலிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை, அதைத்தான் திமுக செய்தது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.