#ElectionBreaking:திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் க்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
காங்கிரஸ் மற்றும் திமுக வுக்கு இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை கையெழுத்தானது.திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்க்கு சட்டப்பேரவை தேர்தலில் 25 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர் .