கட்சி கட்டுப்பாட்டை மீறிய திருநெல்வவேலி எம்பி.? நோட்டீஸ் அனுப்பிய திமுக தலைமை.!

கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி திருநெல்வேலி எம்பி ஞான திரவியத்துக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி ஞான திரவியம் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவருக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், அவபெயர் ஈடுபடுத்தும் விதமாகவும் செயல்பட்ட புகார் குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்க தவறினால் கட்சி விதிப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திமுக தலைமை கழகம் எச்சரித்துள்ளது.
திருக எம்பி ஞான திரவியம் திருநெல்வேலி கிருஸ்தவ திருமண்டல திருச்சபையில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் அங்கு அவரது ஆதரவாளர்கள் திருச்சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விடீயோக்களும் சமூக வலைதளத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025