திமுக கூட்டணி கட்சிகள் உரிய அனுமதி பெறாமல் கொட்டகை அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரபபக இயங்கி வருகிறது. ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், எதிர்க்கட்சியினர் என அவரவர் தரப்பு ஆதரவாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் இரு கட்சிகளை சேர்ந்த முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆட்சியரிடம் புகார் : அதிலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகாரை ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சென்று வழங்கினர். புகார் கொடுத்து வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
அனுமதி பெறவில்லை : அப்போது முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், திமுக கூட்டணி கட்சிகள் உரிய அனுமதி பெறாமல் கொட்டகை அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும், 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு கூட்டம் நடத்துகையில் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் அது எதனையும் அவர்கள் பின்பற்றவில்லை எனவும், அந்த புகாரில் தெரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…